தமிழ் தேசிய போராட்டம் சர்வதேசத்தில் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதற்காக பொதுவேட்பாளர் இறக்கப்பட்டுள்ள நிலையில் இது இனத்துக்கு செய்கின்ற பச்சை துரோகம் எனவே இந்த பழியை சுமக்காமல் அரியநேத்திரன் தேர்தலில் இருந்து விலகவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் படுவான்கரை மண்ணில் இருந்து அறைகூவல் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் தமிழ் தேசிய முன்னணி ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்க கோரிய துண்டுப்பிரசுரம் விநியோகித்து பிரசார நடவடிக்கை நேற்று தேசிய அமைப்பாளர் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெல்வதற்காக 8 ஜனாதிபதிகளை சந்தித்துள்ளோம் ஆனால் அனைவரும் பொய்யான வாக்குறிகளை வழங்கி எங்களுடைய மக்களின் வாக்குகளை பெற்று தமிழ் மக்களின் கலாசார விழுமியங்களையும் இருப்புக்களை கேளிவிக் குறியாக்கிய விதமாகவே செயற்பட்டு வந்தனர்.

எனவே இந்த ஒற்றையாட்சி கட்டமைப்பை சமஸ்டி கட்டமைப்பாக மாற்றப்படவேண்டும் என்ற அடிப்படையில் தமிழர்கள் கடந்த 75 வருடங்களாக போராடி வருகின்றனர்.
எனவே இந்த ஒற்றையாட்சி கட்டமைப்பை சமஸ்டி கட்டமைப்பாக மாற்றப்படவேண்டும் என்ற அடிப்படையில் தமிழர்கள் கடந்த 75 வருடங்களாக போராடி வருகின்றனர்.