கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் பல கோணங்களில் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் தற்போது உயிரிழந்த பெண் மருத்துவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், மரபணு சோதனையில் சஞ்சய் ராயுடன் ஒத்துப் போவதாக இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த மருத்துவர் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகவில்லை எனவும் இச் சம்பவத்தில் சஞ்சய் ராய் ஒருவரே குற்றவாளி எனவும் உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் சஞ்சய் ராய்க்கு எதிரான குற்றப் பத்திரிகையை மிகத் துல்லியமாக இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தயாரித்து வருவதோடு விரைவில் அதனை சமர்ப்பிக்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.