முட்டை ஒன்றை 35 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் - முட்டை வர்த்தக சங்கம் தெரிவிப்பு!

tubetamil
0

 முட்டை விலையை நிர்ணயம் செய்ய விலை சூத்திரம் கொண்டு வர வேண்டும் என முட்டை வர்த்தக சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் ஒரு முட்டையை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளனர் 



குறித்த விடயம் தொடர்பில் அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவிக்கையில், 


ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு 25 ரூபாவிற்கும் குறைவாகவே செலவாகும் என்பதால் சந்தையில் ஒரு முட்டையை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும்  என தெரிவித்துள்ளார்.


குறித்த இதே வேளை சந்தையில் முட்டை விலை 40-45 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக குழுவை நியமித்து விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துங்கள் என முட்டை வர்த்தக சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top