இலங்கையில் கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் கணிசமான அளவுக்கு இணையவழி மோசடிகள் அதிகரிப்பட்டுள்ளதாக இலங்கை கணனி அவசர தயார் நிலைக்குழு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இது தொடர்பாக 8000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறித்த குழு அறிவித்துள்ளது.
அத்துடன் கடந்த செப்டம்பரில் மாத்திரம் முன்னூறுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கணனி அவசர தயார் நிலைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அதே போன்று கடந்த காலங்களில் முகப்புத்தக மோசடிகள் தொடர்பிலும் பெருமளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இலங்கையில் இணைய வழி மோசடிகளை அரங்கேற்றிய குற்றச்சாட்டில் இதுவரை 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இவர்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் பெருமளவான இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.