யாழில் 34 வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதி திறப்பு..!

tubetamil
0

 யாழ். வசாவிளான் மத்திய கல்லூரியூடாக அச்சுவேலி நோக்கி செல்லுகின்ற சுமார் 2 கிலோமீட்டர்கள் தூரமுடைய வீதியானது கடந்த 34 வருடகாலமாக மூடப்பட்ட நிலையில் தற்போது இன்றைய தினம் (31)மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.



இராணுவ முகாமுக்கு அருகாமையில் உள்ள குறித்த வீதிஏ இவ்வாறு திறக்கப்படவுள்ளது.


இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின்போது குறித்த வீதியை நிறைந்து வைத்து, மக்களின் போக்குவரத்துக்கு வழி சமைக்குமாறு கோரிக்கையை முன்வைத்தார்.


அந்தவகையில் இன்றையதினம் குறித்த வீதியானது யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவால் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அத்துடன்  34 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் பலாலி வீதி - வயாவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி இன்று திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top