சுண்டிக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவேந்தலும், பெற்றோர் கௌரவிப்பும் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது!
சுண்டிக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவேந்தலும், பெற்றோர் கௌரவிப்பும் கிளிநொச்சியில் இன்று உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது.
கடந்த 7 ஆண்டுகளாக சுண்டிக்குளம் இளைஞர்களால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
2024ம் ஆண்டு மாவீரர் வாரம் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நிகழ்வு எழுச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
மாவீரர்களின் பெற்றோரால் பொது உருவப்படம் ஏந்திவரப்பட்டது. எழுச்சி கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன், வீதி வளைவும் அமைக்கப்பட்டு பெற்றோர் அஞ்சலி மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், மலர்தூவி அஞ்சலிக்கப்பட்டது. இதன்போது மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாவீரர் பெற்றோரை கெளரவிக்கும் வகையில் உலருணவுப்பொதியும், மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது