நிறங்கள் மூன்று படத்தில் கதாபாத்திரங்கள்: ஒருபக்கம் நல்லது, மற்றொரு பக்கம் கேவலம் - ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

tubetamil
0

 கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான், அம்மு அபிராமி உள்ளிட்டப் பலர் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளியானத் திரைப்படம் நிறங்கள் மூன்று.



ஒரே இரவில் நடக்கும் விஷயங்கள் எப்படி அவர்களை தொடர்புபடுத்துகிறது என்பதுதான் படத்தின் ஒன் லைன். இப்படம் குறித்து ப்ளு சட்டை மாறன் தனது விமர்சனத்தை வெளியிர்த்துள்ளார். 


இந்த படத்தில் ரகுமான் அனைவருக்கும் பிடிச்ச ஒரு பள்ளிக்கூட வாத்தியாராக நடித்திருக்கிறார். அவரின் மக்கள் தான் அம்மு அபிராமி. 



 அதே பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஒரு மாணவனை காதலிக்கிறார். இதில் சரத்குமார் ஒரு நேர்மை இல்லாத ஒரு போலீஸ்காரரா நடிச்சிருக்காரு, அதே போல அதர்வா ஒரு இயக்குனராக நடித்திருக்கிறார். அவருடைய கதையை ஒரு இயக்குநர் திருடி படத்தை எடுத்துவிடுகிறார். இந்த திருட்டு சம்பந்தமாக தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அதர்வா போராடுகிறார். இந்த மூன்று கதையும் ஒன்றாக இணைக்கும் கதை தான் நிறங்கள் மூன்று படத்தின் கதை.



அதர்வா படத்தின் சென்சார் அப்டேட் வெளியானது! "அதர்வா படத்தின் சென்சார் அப்டேட் வெளியானது! "

நிறங்கள் மூன்று: படம் ஆரம்பிக்கும் போது ஒரு பெண் கடத்தப்படுற காட்சி காட்டப்படுகிறது. அந்த கடத்தலை, அம்மு அபிராமியின் காதலன் பார்த்து விடுகிறான். அதே நேரத்தில் அம்மு அபிராமியும் காணாமல் போய்விடுகிறார். அப்போ கடத்தப்பட்டது அம்மு அபிராமியா? அப்போ அம்மு அபிராமி எங்க போனார்? என்கிற அனைத்து விஷயத்தையும் மனதில் வைத்துக்கொண்டு, அனைத்து கதாபாத்திரத்தையும் இணைக்கும் கதை தான் இந்த படத்தின் கதை.


மைனஸ்: இந்த படத்தோட பிரச்சனை என்னவென்றால், கதாபாத்திரத்தில் வருபவர்களின் ஒரு பக்கத்தை நல்லவிதமாக சொல்லிவிட்டு, அவங்களுக்கு மற்றொரு பக்கம் ரொம்ப கேவலமா இருக்கு. அதனால படம் பாக்குறவங்களுக்கு அந்த கதாபாத்திரத்தோட கனெக்ட் ஆகவே முடியல, இதுதான் படத்துல இருக்குற மிகப்பெரிய மைனஸ். குறிப்பா அதர்வாவின் கேரக்டர் தலைவலி கேரக்டரா இருக்கு. அவர் இந்த படத்தில் கதை ஆசிரியராக இருப்பதால், அனைத்து போதை மருந்துக்கும் அடிமையாக இருக்கிறார்.


என அவர் தெரிவித்துள்ளார் 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top