ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அமர்வு ஆரம்பமாகியுள்ளதுடன், மிக எளிமையான முறையில் அமர்வு நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
நாடாளுமன்றத்தைச் சுற்றி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் அங்கு பிரசன்னமாகிஇருந்தனர்.
அத்துடன் அவை ஆரம்பிக்கும் போது முதலாவதாக சாபாநாயகர் தெரிவு இடம்பெற்றுள்ளது. அதனையடுத்து பிரிதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர்கள் ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர்.
இதனையடுத்து புதிய சபாநாயகரால் சபை சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்படும். இதனையடுத்து இன்று காலை 11.30 மணியளவில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது கொள்கை பிரகடந உரை நிகழ்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.