வடக்கு கிழக்கில் மழை..!

tubetamil
0

 வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில், காலை வேளையில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை முன்னறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறித்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஊவா, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில், காலை வேளையில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.


இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top