யாழில் கடும் வெள்ளம் ; பொது மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவித்தல் !

tubetamil
0

யாழில்  (Jaffna) தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 



இவ்வாறான நிலையில்  யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்துக்கு முகம் கொடுத்தல் தொடர்பாக மாவட்ட அரச அதிபரால் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


அந்த அறிவுறுத்தல்கள் வருமாறு, வருமாறு:-

1. வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களை அடையாளப்படுத்தி முன்னாயத்த நடவடிக்கைகளை எடுத்தல்.


2. வெள்ள அனர்த்த ஆபத்து காரணமாக வதிவிடங்களை விட்டு வெளியேறும் மக்கள் தற்காலிகமாக தங்குவதற்கான தங்குமிடங்களைத் தயார்படுத்தல்.


3. தற்காலிக தங்குமிடங்களில் தங்குவோருக்குச் சமைத்த உணவு வழங்க நடவடிக்கை எடுத்தல்.


4. மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுதல்.


5. ஆபத்தான மரங்கள் அல்லது கிளைகள் ஏற்கனவே அகற்றப்பட்டதற்கு மேலதிகமாக, மேலும் இனங்காணப்பட்ட ஆபத்தான மரங்கள் அல்லது கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தல்.


6. ஆபத்தான பனை மரங்களை அகற்றுவதற்குச் சம்பந்தப்பட்ட பிரிவுக்குரிய பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்துக்கு எழுத்து மூலம் அறிவித்து அகற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தல்.



அத்துடன் 24 மணி நேரம் இயங்கும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் தொலைபேசி இலக்கங்களுக்கு (0773957894 / 0212221676 / 0212117117 மற்றும் 117) பொதுமக்கள் அனர்த்தம் தொடர்பாக தகவல்களை வழங்குமாறும் அரச அதிபர் அறிவித்துள்ளதாக  யாழ்ப்பாணம் மாவட்ட செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top