சிங்கப்பூரில் உலக சதுரங்க சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியுள்ளது.
இதில் இன்று(25) . இதில் தமிழ்நாட்டின் குகேஷ் - சீனாவின் டிங் லிரேன் ஆகியோர் மோதுகின்றனர் .
முதல் 40 நகர்த்தல்களுக்கு 120 நிமிடங்கள் வழங்கப்படும். 41வது நகர்த்தலில் இருந்து அரைமணி நேரம் கொடுக்கப்படும். ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 30வினாடிகள் கூடுதலாக கொடுக்கப்படும். போட்டி விதிகளின் படி 41வது நகர்த்தலுக்கு முன்பாக ஆட்டத்தை டிராவில் முடித்துக்கொள்ள முடியாது. முதல் சுற்றில் தமிழ்நாட்டின் குகேஷ் வெள்ளை நிறக்காய்களுடனும்- சீனாவின் டிங் லிரேன் கருப்பு நிற காய்களுடனும் விளையாடுகின்றநர்.
குறித்த இதே வேளை 138 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கண்டத்தை சேர்ந்த வீரர்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் எதிரெதிரே மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.