யாழில் சுயேட்சை வேட்பாளர் வீட்டில் தாக்குதல்!

tubetamil
0

 யாழ்ப்பாணத்தில்  சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டினுள் வன்முறைக்கும்பல் ஒன்று அத்துமீறி உள்நுழைந்து நடாத்திய தாக்குதல் நடாத்தியுள்ளதால் அவரது தந்தை காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.



இந்த தாக்குதல் நேற்றைய தினம் (12) இடம்பெற்றள்ளது.


புவனேஸ்வரன் வசந்தராஜ் என்பவரின் வீட்டின் மீதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்


குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கொழும்புத்துறை - நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள வேட்பாளரின் வீட்டிற்குள் வன்முறைக் கும்பல் ஒன்று அத்துமீறி உள்நுழைந்துள்ளது.


இதனையடுத்து, வேட்பாளரின் தந்தையாரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கிய கும்பலை சேர்ந்தோர் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் மோட்டார் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.


மேலும், அயல் வீட்டின் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதோடு குறித்த வீட்டில் வசிக்கும் இளைஞனின் மீதும் வாள் வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top