திரிபோஷா நிறுவனத்தை மூட நடவடிக்கை...!

tubetamil
0

 திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என க்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பேச்சாளரான ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.



குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 செப்டம்பர் 27 ஆம் திகதியிடப்பட இந்த வர்த்தமானியில், குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு இணங்க வரையறுக்கப்பட்ட திரிபோஷா நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


திரிபோஷா என்பது வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கான போஷாக்கு திட்டம் என்றால் அது மிகையாகாது


திரிபோஷா திட்டத்தை இல்லாமல் செய்ய கடந்த காலத்திலிருந்து பலர் முயற்சி செய்து வருகிறார்கள். 


எனவே, இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு பிழையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.







கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top