கண்டியில் உள்ள தேசிய வைத்தியசாலை ஒன்றில் கடந்த 18 வருடங்களாக சேவையில் இருந்த CT ஸ்கேன் இயந்திரத்திற்கு, வைத்தியசாலை தரப்பினர் கண்கலங்கி பிரியாவிடை வழங்கியா சம்பவம் ஒன்று நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இதன்போது, அங்கு குழுமியிருந்த வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவரும் CT ஸ்கேன் இயந்திரத்தின் மீது மலர்கள் வைத்து பிரியாவிடை வழங்கியதுடன், அங்கு உரையாற்றி வைத்தியர்கள் உள்ளிட்ட சிலர் கண் கலங்கி தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
பல வருடங்களாக இயங்கிய இந்த இயந்திரத்தை தற்போது அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மரியாதையுடனான பிரியாவிடை வழங்குவதற்கு தாம் தீர்மானித்ததாகவும் கண்டி தேசிய வைத்தியசாலையின் கதிரியக்க நிபுணர் தெரிவித்துள்ளார்.
இப்படி ஒரு சிறந்த இயந்திரத்தை இங்கிருந்து அகற்றும்போது, தமக்கு மாத்திரம் அல்லாமல் இந்த இயந்திரத்தின் சேவை அறிந்த, இங்கு பணியாற்றிய மற்றும் பணியாற்றும் அனைவருக்கும் வேதனையான ஒன்று எநாவும் அவர் தெரிவித்துள்ளார்.