தனது விவாக ரத்து தொடர்பில் நிறைய வதந்திகள் பரவி வருவதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியான ஆர்த்தியை பிரிந்திருக்கிறார். ஆர்த்தியை விட்டு பிரிவதாக ரவிதான் முதலில் பொதுவெளியில் சொன்னார். ஆனால் ஆர்த்தியோ முதலில் தனக்கு இதில் விருப்பம் இல்லாதது போல் பேசினார். பிறகு ரவி தான் எடுத்த முடிவில் நிலையாக நின்றதன் காரணமாக ஆர்த்தியும் இந்த பிரிவுக்கு ஒத்துக்கொண்டிருக்கிறார். இருவரும் அண்மையில்கூட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இந்தச் சூழலில் தன்னுடைய பிரிவு குறித்து நடிகர் ஜெயம் ரவி கருத்து வெளியிட்டிருந்தார்.
இப்படி இருக்க ஜெயம் ரவியை ஆர்த்தியும், அவரது தாயும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவிக்கொண்டிருந்தன. இதனையடுத்து அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆர்த்தியை பிரிவதாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் ரவி. அதனையடுத்து பேசியிருந்த ஆர்த்தி, 'ரவியிடம் தான் பேசுவதற்கு எவ்வளவோ முறை முயற்சி செய்தும் அது நடக்கவில்லை. ரவியின் இந்த முடிவு தனக்கு தெரியாது' என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ரவிக்கும், பாடகியான கெனிஷாவுக்கும் தொடர்பிருப்பதாகவும்; அதனால்தான் இரண்டு பேரும் பிரிந்துவிட்டதாகவும் ஒரு வதந்தி பரவியது. அதுகுறித்து மௌனம் காத்த ஜெயம் ரவி பிரதர் படத்தின் நிகழ்ச்சியின்போது; தனக்கும் கெனிஷாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரும் நானும் ஒரு ஆன்மீக மையம் அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். எனது விவாகரத்து விஷயத்தில் அவரை இழுத்துவிடாதீர்கள் என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.