பொது சேவையில், பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் திட்டம் எதுவும் தற்போது அரசாங்கத்திடம் இல்லை எனவும் மாறாக உற்பத்தியை மேம்படுத்துவதில், அரசாங்கம் கவனம் செலுத்தவுள்ளதாகவும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
பணி நீக்கம் என்பது, வேலைவாய்ப்பில் இன்னொரு நெருக்கடியையே ஏற்படுத்துமே தவிர, அதனால் தீர்வு எதுவும் ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் அரச சேவையில் ஆட்சேர்ப்பு செய்யும் போது உற்பத்தித்திறன் கவனிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் வெவ்வேறு அரசாங்கங்களின் கீழ் உற்பத்தித்திறன் அம்சத்தில் கவனம் செலுத்தாமல் தற்காலிக முறையில் பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ஆட்சேர்ப்பு செய்தன. அது, எதிர்காலத்தில் சரி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.