கடந்த நான்கு நாட்களில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் குறித்த வசூல் நிலவரம் குறித்த அதிகார பூர்வமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படமானது கடந்த வாரம் வெளியாகியுள்ள நிலையில் தற்போது வரை உலகளாவிய ரீதியில் 800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
மேலும் இந்தப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் ,வில்லனாக பகத் பாசிலும் நடித்துள்ளனர்.
கமர்ஷியல் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய சினிமாவில் நான்கு நாட்களில் ரூ. 800 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் புஷ்பா 2 தான். மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 1000 கோடியை கடக்கும் என்பதில் சந்தேகமில்லை.