ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஏ.ஆர் ரகுமான் கமிட்டாகி இருந்த நிலையில் அவர் திடீரென விலகியதால் புதிய இசையமைப்பாளராக சாய் அபியங்கர் கமிட் செய்யப்பட்டுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்ரீம் வாரியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த படத்துக்கு தற்காலிகமாக சூர்யா 45 என பெயரிடப்பட்டுள்ளது.
கட்சி சேர ஆல்பம் பாடல் மூலம் பிரபலமான இவர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் பென்ஸ் படத்தில் இசையமைப்பாளராக கமிட்டானதை தொடர்ந்து, தற்போது சூர்யா படத்திற்கு இசையமைக்கவுள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் விலகியதற்கு என்ன காரணம் என இதுவரை தெரியவில்லை.
.