2025 சம்பியன் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடாது! வேறு எந்த நாடு தெரியுமா?

tubetamil
0

 எதிர்வரும் 2025 சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தியாவில் நடக்க உள்ள சர்வதேச கிரிக்கெட் சபை நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது எனவும், அப்போது பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் அனைத்தையும் வேறு நாட்டில் நடத்த வேண்டும் எனவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.



இதுகுறித்து மேலும் தெரிய வருவதாவது,  2025 செம்பியன் கிண்ண போட்டித் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, 2025 பெப்ரவரி 23ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ளது.


இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியாது என அறிவித்ததை, அடுத்து கடந்த ஒரு மாதமாக  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தற்போது இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை துபாயில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.


இதனபோதே குறித்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.


இந்தியா ஆடும் போட்டிகளை தவிர்த்து ஏனைய அணிகள் ஆடும் போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி, கராச்சி மற்றும் லாகூர் ஆகிய மூன்று நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறவுள்ளன.



இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. 



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top