பனங்ககூடலாக வளர்ந்திருந்த பனை வடலிகளை தறிப்பதற்கு முன் அனுமதி பெறவேண்டும் என்பது தொடர்பாக தனக்கு தெளிவான விளக்கம் இருந்திருக்கவில்லை என மன்னார் தனங்கிளப்பு, சாவகச்சேரியில் வசிக்கும் கிருஷாந்தன் கார்த்திஜாயினி (895383988V) தெரிவித்துள்ளார்.
அவருக்குச் சொந்தமான காணியில் அனுமதியின்றி தறிக்கப்பட்ட பனை மரங்கள் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட விடயம் சம்பந்தமாக அவருக்கும் பனை அபிவிருத்திச் சபைத் தலைவருக்கும் இடையே இன்று ( 23) இடம்பெற்ற தொலைபேசி ஊடான கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டாம் எனவும் இக்குற்றத்துக்கு தண்டனையாக பனை அபிவிருத்திச் சபையினால் வழங்கப்படும் தண்டனையினை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
குறித்த இதே வேளை மேற்படி வழக்கினை மீளப்பெற முடியாது எனவும், ஆனால் தங்களின் இவ்விடயம் தொடர்பான முழுமையான விளக்கத்தினை கடிதம் மூலம் தெரியப்படுத்தலாம் எனவும். நீதிமன்றிலால் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படும் தீர்வையும் தங்களின் கோரிக்கையிணையும் பரிசீலித்து இணக்கப்பாட்டுக்கு வருவது தொடர்பாக சபை இயக்குனர் சபையில் தீர்மானம் எடுக்கப்படும் பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் தெரிவித்துள்ளதுடன் மேலும் பனை அபிவிருத்திச் சபையின் அபிவிருத்தி முகாமையாளருடன் கலந்துரையாடி தங்களில் கடிதத்தினை வழங்குமாறு தெரிவித்தார்.