ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து பாதையை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகிய நிலையில் குறித்த விபத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளதுடன் , 50இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தானது பேருந்து சாரதியின் கவனமின்மை காரணமாகவே நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் குறித்த பேருந்தில் 54 பேர் வரை பயணித்துள்ளதாகவும், இவ்விபத்தில் காயமடைந்த 50 பேர் வரை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் குறித்த விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.