இந்திய சிறையிலிருந்து மீண்டு யாழுக்கு வந்த மீனவர்கள் !

tubetamil
0

 இந்தியாவில்  சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கையின் மூன்று  கடல் தொழிலாளர்கள் நேற்றையதினம் (20) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.



இவர்களில் இருவர் யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்தவர்களும் ஒருவர் மட்டக்களப்பு வந்தாறுமூலையைச் சேர்ந்தவராக உள்ளார்.


இவர்கள் கடந்த 07 மாதங்களுக்கு முன்னர் அனலைதீவு கடற்பரப்பில் கடந்த கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை, இயந்திர பழுதின் காரணமாக இந்தியாவின் கரையோரத்தை சென்றடைந்தனர்.இதன் பின்னர், இவர்களை சிறைப்பிடித்த இந்திய கடற்படையினர் சிறிது காலம் சென்னை புழல் சிறையிலும் அதற்கு பின்பு திருச்சி இடைத்தங்கல் முகாமிலும் தங்க வைத்திருந்தமை  குறிப்பிடத்தக்கது. 

அண்மையில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றதற்கு பின்னர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான உரையாடலிலும் புதிய கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் முயற்சியினாலும் குறித்த மூன்று கடற்றொழிலாளர்களும் நேற்று விடுக்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top