ஜெர்மனியின் மாக்டேபர்க் நகரின் கிறிஸ்துமஸ் சந்தை கூட்டத்திற்குள் வேகமாக நுழைந்த கார் மோதியதால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதோடு 60 முதல் 80 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என ஜெர்மனியின் அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தைக்குள் நுழைந்த 'BMW' கார் ஒன்று அங்கிருந்த மக்களை மோதி தள்ளியவாறு 400 மீட்டர் வரை சென்றுள்ளது.
இந்நிலையில், விபத்திற்கு காரணமான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சமூக ஊடங்கங்களில் விபத்து தொடர்பான காணொளிகள் பகிரப்பட்டு வருகின்றன. குறித்த காணொளிகளில் பலர் தரையில் வீழ்ந்து கிடைக்கும் நிலையில் சிகிச்சை பெற்று வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பி அந்தநாட்டு பிரதமர் ஒலாஃப் ஸ்கோல்ஸ்(Olaf Scholz) கருத்து வெளியிடுகையில் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களுடன் எனது எண்ணங்கள் இருப்பதாக கூறியுள்ளார்..