இலங்கையின் உணவகங்களில் தேங்காய் சம்பல் இல்லாத சோகமான நிலை!

tubetamil
0

நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் தற்போது தேங்காய் சம்பல் மற்றும் தேங்காய் பாலைக் கொண்டு செய்யப்படும் குழம்பு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. 


குறித்த விடயம் தொடர்பில்  ஹர்ஷன ருக்சானே இவ்வாறு  தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,


அரிசி, முட்டை, உப்பு மற்றும் தேங்காய் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பால் உணவுப் பொருட்களின் விலையும் 30 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளதுடன் பொருட்களுக்கான பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பினால் மதிய உணவுப் பொதி தயாரிப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டில் தற்போது கோழி இறைச்சியின் விலை1,200 ரூபாவில் இருந்து 1,280 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதே வேளை சந்தையில் தேங்காய்களின் விலை அதிகரிப்பு மற்றும் பற்றாக்குறையே குறித்த குழம்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.





கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top