யாழ் பொது நூலகத்தை எரித்த பாவிகள் அல்ல; நாங்கள் நம்பகமானவர்கள் - இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு!

tubetamil
0

 தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்ததற்கு முக்கிய காரணம் நாங்கள் நம்பககரமானவர்கள் என்பதை நிரூபித்தமையே ஆகும் என கடல்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  தெரிவைத்துள்ளார்.



நேற்றைய தினம் பாராளுமன்றில்  இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


இந்த ஆண்டு நடைபெற்ற இரு தேர்தல்களும்  இலங்கை வரலாற்றையே மாற்றியமைத்த தேர்தல்களாகும்.


இவ்வாறு வரலாற்றை மாற்றியமைத்த தேர்தல்களுக்கு முக்கய பங்காளிகளாக இருந்தவர்கள் வடக்கு கிழக்கிலுள்ள மக்கள்.


இந்தவகையிலே, யாழ். மாவட்டத்திலுள்ள மக்கள இன்று தேசிய மக்கள் சக்தியின் கையிலே ஆட்சியை ஒப்படைத்திருக்கின்றார்கள்.


தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்ததற்கு முக்கிய காரணம் நாங்கள் நம்பககரமானவர்கள் என்பதை நிரூபித்தமையே ஆகும்.


எனினும், தமிழ் மக்களோடு ஒரு கொடுக்கல் வாங்கல் இருக்கின்றது. அது வேறெதுவுமில்லை. கடந்த 76 ஆண்டு கால வரலாற்றில் உள்ள இனவாதம் வேண்டாம் என்ற நிலைமையெ ஆகும்.


அன்று 1977இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தமிழ் மக்களை அடித்து நொருக்கினார்கள். அடுத்து தொடர்ந்து வந்த இரண்டு வருடங்களில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்தார்கள்.


அந்த சட்டத்தின் மூலம் இன்று வரை தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு காரணமானவர்கள் தேசிய மக்கள் சக்தி அல்ல.


இதன் தொடர்ச்சியாக 1981இல் யாழ். நூலகத்தை எரித்து பல ஆயிரம் புத்தகங்கள் கொழுத்தப்பட்டது. இதற்கான காரணகர்த்தாககள ஜேவிபி அல்ல யார் என்று எல்லோருக்கும் தெரியும்.


இந்தவகையிலே, வரலாற்றை தேடிப் பார்க்கின்ற போது அன்று ஏற்பட்ட கரும்புள்ளி இன்றும் எமக்கு மாறவில்லை எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top