அனுரவின் 'வளமான நாடு, அழகான வாழ்க்கை' என்ற கொள்கை முற்றிலும் தோல்வியே - சஜித் தெரிவிப்பு

tubetamil
0

 ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின்  வளமான நாடு அழகான வாழ்க்கை   என்பதை நிர்ணயிப்பதற்கான பயணம் முற்று முழுதாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். 


இன்று ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான 4நான்காம் நாள் விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 


குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற கோசத்தில் ஜனாதிபதி கொள்கை பிரகடனத்தை வெளியிட்டிருந்தார். வந்த வாரத்திலேயே இந்த அரசாங்கம் மக்கள் ஆணையை மீறி மக்களினுடைய உரிமையை காட்டிக்கொடுத்து இருந்த நிலைமையிலும் எந்த விதமான மாற்றங்களும் கொண்டு வராமல் IMF இன் உடன்பாடுகள் அவ்விதமாக செல்ல எடுக்கப்பட்ட முடிவு அண்மைக்காலத்தில் எடுக்கப்பட்ட பாரதூரமான முடிவு என்று நான் கருதுகின்றேன். 


வளமான நாடு, அழகான வாழ்வு என்ற கொள்கை பிரகடனத்தில் 155 ஆவது பக்கத்திலே கூறப்படுகின்றது மாற்று கடன் நிலைபேறு தொடர்பான பகுப்பாய்வு அந்த கடன் மறுசீரமைப்பு ஒரு பகுப்பாய்வு தொடர்பான மாற்றீடு முறைமை. அதனூடாகத்தான் திசைகாட்டி அரசாங்கம் IMF உடன் புரிந்துணவுடன் முன்னோக்கி நகர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்பாடுகள் IMF உடனாக இந்த புதிய கடன் மாரு சீரமைப்புனாகத்தான் மேற்கொண்டீர்களா? இல்லை என்றால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசினால் மேற்கொள்ளப்பட்ட அந்த மாற்று கடன் நிலைபேறு பகுப்பாய்வு ஊடாகத்தான் கொண்டு செல்லவுள்ளீர்களா என்பதை தான் முதலாவது கேள்வியாக கேட்டு கொள்ள விரும்புகின்றேன். 


இரண்டாவது விடயம்  உங்களுடைய அபிலாஷை வளமான நாடு, அழகான வாழ்க்கை என்ற விடயம். வளமான நாடு அழகான வாழ்க்கை என்பதை நிர்ணயிப்பதற்கான பயணம் முற்று முழுதாக வீழ்ச்சி அடைந்திருக்கின்றது. தற்பொழுதுள்ள IMF இறைமை முறைமை  பற்றிய புரிதல் இடம்பெறுகின்ற போது நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்  IMF உடன் 2024 மார்ச் மாதம் அவர்களுடைய அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கின்றது மீண்டும் கடன் செலுத்துதல்,  ஆரம்பிப்பது, 2034 இலெ செயற்படுத்துவது போதுமானது என்று.
 


இரு தரப்பு கடன் மாத்திரம் அல்ல சர்வதேச முறிக்கடன் தொடர்பாகவும் இந்த IMF அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒப்பந்தத்தின்  ஊடாக கடன் செலுத்துகின்ற செயன்முறை 2028 ஆம் ஆண்டில்  ஆரம்பிக்கப்படுகிறது. இன்னும் நான்கு வருடங்களில்  அது ஆரம்பமாகிறது. 


ஒரு கணமேனும் நீங்கள் நினைக்கின்றீர்களா நான்கு வருடங்களில் இந்த கடனை மீள செலுத்துகின்ற செயன்முறையை குறுகிய காலத்தில் வலுப்படுத்த கூடிய பொருளாதாராதை கட்டியெழுப்ப முடியும் என்று. 


ஆகவே இந்த ஒப்பந்தத்தின் ஊடாக எங்களினுடைய நாடு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top