மதுபான சாலை அனுமதி தொடர்பான அனுமதிகளை நிறுத்துவீர்களா என பாராரளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நேற்று மதுபானசாலை அனுமதி பட்டியலை வெளியிட்டது நல்லது.மதுபான சாலை சொந்தக்காரர்கள், விண்ணப்பங்கள், விதப்புரைகள், சிபாரிசுகள் பற்றி விசாரணைகள் நடைபெற்றதா, யார் CID யா அல்லது பொலிஸா இந்த விசாரணைகளை மேற்கொள்வது?. மாற்றும் மதுபானசாலை அனுமதிகளை இரத்து செய்யப்படுமா என்று கூற வேண்டும். 5000 பேருக்கு ஒரு மதுபானசாலை அனுமதி கொடுக்கப்பட்டிருக்கின்றது.
ஆகவே இதனை நிறுத்துவீர்களா? அல்லது 300க்கும் அதிகமான மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் அனுமதிப்பத்திரங்கள் இருக்கின்றன இதுபற்றி நீங்கள் விளக்கமளிக்க வேண்டும். நேற்றைய தினம் மக்கள் இதனையம் கேட்குமாறு என்னிடம் கூறியிருக்கிறார்கள் - என அவர் தெரிவித்துள்ளார்.