இலங்கையர் என அடையாளம் போலிமுகமாக அல்லது முகத்திரையாகதான் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன இரண்டாம் நாள் விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனுர குமார திசாநாயக்கவின் கொளகை பிரகடன உரையை பார்க்கும் போது ஜனநாயகம் கடந்த காலத்தில் இல்லை என தெரிவித்திருக்கிறார். எங்களுடைய கட்சி தொடர்ச்சிக்காக NPP க்காக அதனுடன் சேர்ந்து கள்ளத்தனமான ஒரு அரசாங்கத்துடன் உடன்படாத ஒரு போக்கினை நாங்களும் கடைப்பிடித்தோம்.
ஜனாதிபதியின் முதலாம் பக்க உரையில், நான் ஏற்றுக்கொள்கின்றேன் சமுதாயங்கள் பல இருக்கின்றன. அவை எங்களை நம்பவில்லை. ஆனால் ஏனைய கட்சிகளின் இயக்கங்களில் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஜனநாயகத்தின் அந்த ஆள ஆணி பல்வேறு குழுக்களிலும் இருக்கிறது. எங்களுடைய அரசாங்கத்தில் நானும் கடப்பாடு கொண்டிருக்கிறோம். எல்லா மக்களின் அபிலாசைகளையும் நிறைவேற்ற கடப்பாடு கொண்டிருக்கின்றோம்.
நான்குறிப்பாக குறிப்பிடுவது அந்த மூன்று பந்திகளுக்கே. ஏனெனில் அவர் தொடர்ந்து பேசும் போது குறிப்பிடுகின்றார். அது மிக முக்கியமான கொள்கையின் பகுதியாக இருக்கின்றது. அதாவது இந அடிப்படையிலான அரசியலுக்கு இடம் கொடுக்க மாட்டோம். அதே போன்று, சமய அடிப்படை தீவிரவாதத்துக்கு இடம் கொடுக்க மாட்டோம். நாங்கள் போதிய அளவு இனமோதலால் வருந்தியவர்கள். என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
இதிலே ஒரு முரன்பார்ட்டுக்கான சாத்தியம் இருக்கின்றது.
ஜனாதிபதி அந்த பிரச்சார காலப்பகுதியில் NPP அவர்கள் இனவாதத்துக்கு எதிரானவர் அவர் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் இனவாதம் தொடர்பாக பயன்படுத்திய அந்த சொல் தேசிய வாத அரசியல், சமய தீவிரவாதம் இந்த பொதுவான சொற்பதங்கள் தான் பயன்படுத்த பட்டிருக்கின்றன.
இங்கே நான் நினைவு படுத்த விரும்புவது என்ன வென்றால் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் எங்கள் கட்சி (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி) இழிலங்கையர் என்பதை நம்புகின்றோம்.
தமிழ் அடையாளம் என்பது பாதுகாக்கும் வரை நாங்கள் இருப்போம். அந்த இலங்கையர் என அடையாளம் போலிமுகமாக அல்லது முகத்திரையாகத்தான் இருக்கிறது. அது இனவாத அடையாளமாகத்தான் இருக்கின்றது. என அவர் தெரிவித்துள்ளார்.