பொதுப் போக்குவரத்துக்கு இடையூறான வகையில் காணப்படும் நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றுமாறு வவுனியா நகரசபை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா நகர்ப்பகுதிகளில் உள்ள குறித்த கடைகளையே அகற்றுமாறு அவர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா நகரப்பகுதிகளில் உள்ள நடைபாதை வியாபார நிலையங்களால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக வவுனியா நகரசபைக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வந்தநிலையில் நகரசபை செயலாளரால் வியாபார நிலையங்களை உடனடியாக அகற்றுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலுப்பையடிப்பகுதி மற்றும் சந்தைக்கு அண்மித்த பகுதிகள், வைத்தியசாலையை வீதி ஆகியவற்றில் வியாபாரத்தை முன்னெடுத்துவரும் நடைபாதை கடைகளை அகற்றுமாறு அவர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.