பிக் பாஸ் 8ம் சீசனில் இருந்து இன்று சிவக்குமார் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்.
நாமினேஷன் லிஸ்டில் கடைசி 4 போட்டியாளர்களுக்கு ஒரு பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டது
அதில் சிவக்குமார் தான் எலிமினேஷன் என தெரியவந்தது. அதை அவரும் பெரிய அதிர்ச்சியாக எடுத்துக்கொள்ளாமல் சகஜமாக வெளியில் கிளம்பிய சிவகுமார் எல்லோர் முன்பும் தான் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு போக வேண்டும் என தெரிவித்த அவர் தீபக் பற்றி கூறும் போது அவர் பிடித்தவர் என நினைத்துகொண்டு தான் உள்ளே வந்தேன், அவரை முறைத்து கொண்டு நின்றேன், ஆனால் அவர் அப்படியே opposite என்பது இப்போது புரிந்துகொண்டேன் என தெரிவித்துள்ளார்.
சிவக்குமார் வெளியில் கிளம்பும்போது அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார். அனைவரும் அவரை வழியனுப்ப வாசல் வரை வந்தனர். ஆனால் முத்துக்குமரன் மட்டும் வரவில்லை.