பொலிவூட் இல் சினிமாவின் மாஸ் ஹீரோக்களின் ஆட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்ற படம் என்றால் அது ‘ரவுடி ரத்தோர்’ தான். பிரபுதேவா இயக்கத்தில் உருவான இந்த படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வணிக ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு பிறகு, ‘ரவுடி ரத்தோர் 2’ உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2012-ம் ஆண்டு வெளியான ‘ரவுடி ரத்தோர்’ படம், ராஜமவுலி இயக்கிய தெலுங்கு படமான ‘விக்கிரமாக்குடு’வின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இது ரஹாமிழில் சிறுத்தை என்ற பெயரில் முதலில் ரீமேக் ஆனமாய் குறிப்பிடத்தக்கது. அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம், 70 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு, சுமார் 250 கோடி ரூபாய் வசூலித்தது. பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இந்த படத்தை தயாரித்திருந்தார்.
தற்போது, ‘ரவுடி ரத்தோர் 2’ படத்தையும் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கவுள்ளார். இதற்கான கதைக்களம் முடிவடைந்துவிட்டதாகவும், கன்னடத்தில் ‘கேடி’ படத்தை இயக்கி வரும் பிரேம், இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் நாயகனாக யார் நடிப்பார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.