தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சூரியின் குடும்பத்திற்கு சொந்தமான மதுரை ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மன் ஹோட்டலில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாகக் கூறி ஒரு சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
அவரளித்த புகாரில், ஹோட்டல் நிர்வாகம் ஒதுக்கப்பட்ட இடத்தை மீறி செப்டிக் டேங்க் மீது சமையல் செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காய்கறிகள் நறுக்குதல், சட்னி, சாம்பார் தயாரித்தல் உள்ளிட்ட அனைத்து சமையல் பணிகளும் அந்த இடத்திலேயே நடைபெறுவதாகவும், லி, கரப்பான் பூச்சி, பல்லி போன்றவை நடமாடும் இடத்தில் தரமற்ற முறையில் உணவுகளை தயாரித்து கொடுக்கிறார்கள். இந்த உணவைத்தான் பல நோயாளிகள் வாங்கி சாப்பிடுகின்றனர். அதுமட்டுமில்லாமல் நர்ஸ் விடுதியில் ஜன்னல் கதவை திறக்கவே முடியாத அளவிற்கு, இவர்கள் வாட்டர் கேனை அடக்கி வைத்து விடுகிறேன். இதனால் விடுதியில் இருப்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றன. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து அம்மன் ஹோட்டலை மூட வேண்டும் எனவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை ஹோட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது. உணவு தயாரிப்பு வேறு இடத்தில் நடைபெறுவதாகவும், இந்த புகார் நடிகர் சூரியை இழிவுபடுத்தும் நோக்கில் செய்யப்பட்டதாகவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.