சித்த மருத்துவ பீட மாணவர்கள் பனையின் அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும் என சித்த வைத்தியரும் யாழ் மாகாண பனை அபிவிருத்தி சபையின் தலைவருமாகிய விநாயகமூர்த்தி சகாதேவன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலை கழகத்தில் மருத்துவ பீடத்தில் சித்த மருத்துவ புதுமுக மாணவர்களுக்கான முதலாவது வகுப்பில் சித்த வைத்தியத்துக்கும் பனைக்கும் உள்ள தொடர்புகள் பற்றி விரிவுரையாற்றியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சித்த மருத்துவ பீட மாணவர்கள் பனையின் அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சித்த வைத்தியம் பனையோடு எவ்வாறு தொடர்பு பட்டுள்ளது என்றும் நாடிகளின் குணம் குறிகளை வைத்து சித்த வைத்தியத்தின் மூலம் நிவாரணங்களை இனங்காண்பதன் மூலம் சித்த வைத்தியத்தில் பனை சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு புதிய மருந்துகளை கண்டு பிடிக்க முடியும் என்றும் அதற்கான ஒத்துழைப்புக்களை பனை ஆராட்சி நிலையம் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அந்த மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்த விரிவுரையின் போது பனை அபிவிருத்திச் சபையின் முகாமையாளர் எஸ்.ஸ்ரீ ஸ்ரீ விஜேந்திரன் மற்றும் சித்த வைத்திய சபை பீடாதிபதி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.