மாவீரர் போராளி குடும்ப நலன் காப்பகத்தின் ஒன்று கூடலும் எதிர்கால நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலும் இன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் சபை மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வைத் தொடர்ந்து ஊடக சந்திப்பும் இடம்பெற்றது.
குறித்த ஊடக சந்திப்பில் மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் தலைவர் தேவராசா தீபன் கருத்து தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் காலத்தில் மாவீரர் நினைவேந்தர்களை தாம் பொறுப்பு எடுத்து செய்வதாகவும், அதற்கேற்றவாறு தாம் நிர்வாகங்களை தேர்வு செய்து முன்னாள் போராளிகள் தலைமை தாங்கி மாவீரர் நினைவேந்தலை நடத்துவதாகவும் அதுக்கு முன்னாயத்தமாக கூட்டமாக இது நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.