ரஷ்ய இராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட்ட இளைஞர்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் கோரிக்கை!

tubetamil
0

இலங்கையிலிருந்து முகவர்களால் ஏமாற்றப்பட்ட நிலையில் ரஷ்யா இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட இளைஞர்களை மீட்டெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அனுர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.



இன்று 10 ஆவது நாநாடாளுமன்றின் முதலாவது அமர்வு கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.


இதில் இன்றைய (06) நான்காம் நாள் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


குஉரித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


இலங்கையிலிருந்து முகவர்களால் ஏமாற்றப்பட்ட நிலையில் ரஷ்யா இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட.யாழ்ப்பாணம் கச்சேரியைச்  சேர்ந்த 24  வயதுடைய மற்றும் கரவெட்டியைச் சேர்ந்த  21 வயதுடைய இளைஞன் சுயனிகாந் பகீரதன் மற்றும்  முல்லைத்தீவைச் சேர்ந்த 46 வயதுடைய சுந்தரலிங்கம் பாலச்சந்திரன் மற்றும் யாழ். குருநகரைச் சேர்ந்த 37 வயதுடைய கீதபொன்பலம் பிரதாப்  மற்றும்  31 வயது ஸ்ரீபன் சுரேஸ் ஆகியோர் ஏமாற்றப்பட்டு ரஷ்யா இராணுவத்தில் வலிந்து இணைக்கப்பட்டுள்ளார்கள். 


மேலும், இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள அவர்களுடைய புகைப்படங்களையும் அனுப்பியிருக்கிறார்கள். 


ஆகவே கெளரவ சபாநாயகர் அவர்களே இதில் 3 பேரினுடைய படங்களும் இருக்கின்றது. 


தயவு செய்து  இவர்களை இந்த நாட்டுக்கு எடுப்பதற்கு ஒரு வழிமுறையை எடுத்து எம்மிடம் மீட்டுத் தருமாறு  கேட்டுக் கொள்கின்றேன், என சபையில் ஸ்ரீதரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top