சித்த மருத்துவம் என்பது என்பது ஒரு இயற்கையோடு சம்பந்தப்பட்ட மருத்துவம். அது பிரபஞ்சத்தில் இருக்கின்ற ஒரு வைத்தியம். அந்த பிரபஞ்சத்தை நாங்கள் நேசிக்கும் பொழுது தான் அந்த பிரபஞ்சத்தில் உள்ள மருந்து பொருட்கள் எங்களின் உடம்புக்கு மருந்தாக அமையும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதி விவியன் சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
.
நேற்றைய தினம் (31) யாழ். பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ பீடத்துக்கு புதிதாக தெரிவான மாணவர்களுக்கான திசைமுக காட்டல் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது.
இதன்போது அவர் ஆற்றிய உரையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பனையின் அதிகளவான பொருட்கள் மருந்துக்கு எடுக்கிறோம் ,உணவுக்கு எடுக்கிறோம். ஆடை ஆக்கங்களில் இப்போது நிறைய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. அத்துடன் திரு விநாயகமூர்த்தி சகாதேவன் அவர்கள் பாரம்பரியமாக சித்த வைத்தியத்தினை மேற்கொண்டு வருபவர்கள். அவர்களிடம் நாடி பற்றிய ஒரு நன்றான விளக்கங்கள் இருக்கின்றது.
சித்த மருத்துவத்துக்கு ஒரு தெளிவான அறிவு, தெளிவான ஆராய்ச்சி போன்ற விடயங்களை நிறைய அவர் தன்னகத்தே அடக்கியுள்ளார். இவ்விரு வளவாளர்களையும் சரியாக பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்குரிய அடித்தளத்தை உருவாக்க முடியும். முதலில் ஒரு ஈர்ப்பு வரவேண்டும் கல்வித்துறையில் அதற்காகத்தான் இந்த திசைமுககாட்டலில் பல்வேறு வளவாளர்களை அழைத்தோம்.
ஏனெனில் நீங்கள் க.பொ.த உயர்தரத்திலும் கல்வி கற்கும் மட்டும் எந்த துறைக்கு போக போகின்றோம் என முழுதாக முடிவெடுக்க முடியாது. இப்பொழுது உங்களினுடைய கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நூறு வீதம் உள்வாங்கப்பட்டு நீங்களும் விரும்பி வந்திருக்கிறீர்கள். அந்த வகையில் இப்படியான வளவாளர்களை நீங்கள் சரியாக பயன்படுத்துவதன் மூலம் இந்த துறையில் அறிவை வளர்த்துக்கொள்ளலாம். என அவர் தெரிவித்துள்ளார்