யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று (15) மர்மவீடு ஒன்றில் மீட்கப்பட்ட 18 புத்தர் சிலைகள் தொடர்பில் அதிர்ச்சியைக் ஏற்படுத்தியுள்ளன. இந்த சிலைகள் தொடர்பாக பல நாடுகளிலிருந்து வருவதாகக் கருதப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நவம்பர் மாதம் கடல் நிலை மாற்றங்களால் பல்வேறு கடல் சீற்றங்கள் மற்றும் அலைகளை ஏற்படுத்தியதை பின்பற்றி நடைபெற்று இருக்கலாம். மேலும், பல நாடுகளின் பௌத்த மரபு அம்சங்களுடன் கூடிய சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த 18 புத்தர் சிலைகள், மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வருவதாகவும், அவை பௌத்த சமயத்தின் வரலாற்று மரபுகளை பிரதிபலிப்பதாகவும் கருதப்படுகின்றன.
மருதங்கேணி பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, 18 புத்தர் சிலைகளையும் செப்பேடுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் மீட்கப்பட்ட சிலைகள் தொடர்பாக, அவை எந்த நாட்டில் இருந்து வந்தது மற்றும் அவற்றின் மதிப்பை பற்றி மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.