வேலணை நான்காம் பகுதியில் இலங்கையில் பதிவு செய்யப்படாத வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சுமார் 50 மில்லியன் பெறுமதியான பூச்சிக்கொல்லிகள், இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வேலணை நான்காம் பகுதியில் கைப்பற்றப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நாட்டிற்கு சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்யும் முயற்சியில் இருந்தனர். பொலிசாரின் விசாரணையின் போது, இந்த பூச்சிக்கொல்லிகள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாகவும், அவை முறையான உரிமம் மற்றும் பதிவுகள் இல்லாமல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தெரியவந்தது.
அத்துடன் இது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.