சின்னத்த்திரை உலகில் மீண்டும் ஒரு இரண்டாம் பாக தொடர் வெளியாகவுள்ளதென்றால் அது ரோஜா தான். சின்னத்திரையின் ராணி பிரியங்கா நடித்த ரோஜா தொடர், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் இப்போது வெளியாக உள்ளது. இது வெறும் தொடர் மட்டுமல்ல, ஒரு பிரம்மாண்டமான வெப் சீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் நாயகியாக பிரியங்காவும் அவரது ஜோடியாக நியாஸ் கான் நடிக்கிறார்.
கள்ளப்படம் படத்தின் இயக்குனர் வடிவேல் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸில் ராஜ்குமார், ஹரிப்ரியா, இஸ்மத்பானு உள்ளிட்ட பல புகழ்பெற்ற நடிகர்கள் இந்த வெப் சீரியஸில் நடித்துள்ளநிலையில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் P.C. ஸ்ரீராமின் உதவியாளர் ஸ்ரீராம் சந்தோஷ் இந்த தொடருக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
யூடியூப் சேனலில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் ஹீரோ, 17 பெண்களை காதலித்து காதலில் தோல்வியடைந்த நிலையில், ரோஜா மகள் மலர்மதியை காதலித்து அவளை கைப்பற்ற முயற்சிக்கிறான். மலர்மதியோ, அவனுக்கு ஒரு சவால் விடுகிறாள். அந்த சவாலில் வெற்றி பெற்றால் மட்டுமே அவனை திருமணம் செய்வதாக கூறுகிறாள். ஹீரோவின் காதல் வெற்றி பெறுமா? இல்லையா? என்பதுதான் மீதிக் கதை.
இந்த வெப் சீரிஸ் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் Saregama TVShows Tamil youtube சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.
ரோஜா தொடர் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த வெப் சீரிஸ், திரைப்படங்களுக்கு இணையான தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமின்றி, பெரிய திரை ரசிகர்களும் இந்த வெப் சீரியஸை பார்த்து ரசிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.