சாவகச்சேரியில் வயல் கிணற்றிலிருந்து வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு!

tubetamil
0

 சாவகச்சேரி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள கிராம்புவில் பகுதியில் உள்ள ஒரு வயல் கிணறில் கடந்த வெள்ளிக்கிழமை (02)பிற்பகல், அழுகிய நிலையில் ஒரு வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.



இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, 


குறித்த பகுதியை பசளை இடச் சென்றவர்களுக்கு அந்த சடலம் தெரிய வந்தது. இதனை அடுத்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளுக்காக அந்த சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டது.


இந்தச் சம்பவம் தொடர்பாக, பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்தும் நடந்து வருகின்றன. தற்போது, சம்பவத்திற்கு காரணமான வேறு எந்த விவரங்களும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 












Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top