"என்னை விடுதலைப் புலியாக கருதினால் என்னை கைது செய்யுங்கள், இல்லையெனில் சுட்டு வீழ்த்துங்கள்" சபையில் அர்ச்சுனா எம்.பி ஆவேசம்..!

tubetamil
0

 தனது ஆதரவினை இன்றிலிருந்து இந்த அரசாங்கத்திற்கு வாபஸ் வாங்குவதாகவும் இன்றிலிருந்து உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுவேன் எனவும் பாராளுமன்றஉறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,தெரிவித்துள்ளார்.



இது குறித்தது இன்று பாராளுமன்றில் ஆற்றிய உரையாற்றிய போது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், 



, இந்த அரசாங்கம் தனது நடவடிக்கைகளால் தன்னை புலி என்ற அடையாளத்தில் கட்டுப்படுத்த முயற்சித்துள்ளது. "என்னை விடுதலைப் புலியாக கருதினால் என்னை கைது செய்யுங்கள், இல்லையெனில் சுட்டு வீழ்த்துங்கள்" என்று தெரிவித்தார். அவர், 1980ஆம் ஆண்டுகளில் அரசாங்கம் பல படுகொலைகளை மேற்கொண்டது என்றும், குறிப்பாக முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டினார். மேலும், இந்த அரசாங்கத்தால் தவறான முறையில் 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், எதற்காக சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக இது நடக்காது என்றும் கவலை தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்  "64 நாட்கள் கதைப்பதற்கான இடம் தரப்படவில்லை என்பது இந்த அரசாங்கத்தின் வெட்கமற்ற செயல். எதற்காக இவர்கள் எனக்கு உரையாற்ற இடம் வழங்காமல் பயப்படுகின்றனர்?" என கேள்வி எழுப்பினார். இன்றிலிருந்து, தனது ஆதரவுகளை இந்த அரசாங்கத்திற்கு முற்றிலும் வாபஸ் வாங்குவதாகவும், இனிமேல் அவர் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top