யாழில் கபோத உயர்தர பரீட்சை எழுதிய மாணவி ஒருவர் பரீட்சையினை திருப்திகரமாக எழுத முடியவில்லை என்ற விரக்தியில் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) குறித்த மாணவி 30ஆம் திகதி பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று எழுதிய பரீட்சை திருப்திகரமாக இல்லை என தாய் - தந்தையருக்கு கூறி கவலையடைந்துள்ளார். பின்னர் அவரது தந்தை அலுவலாக வெளியே சென்றவேளை குறித்த மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயவாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்த மாணவி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 7ஏ 2பி சித்திகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்