யாழ் காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை நாளை முதல் ஆரம்பம் !

tubetamil
0

 தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



குறித்த விடயம் தொடர்பில் கப்பல் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவிக்கையில் 


காலநிலையைக் கருத்திற் கொண்டு கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் 


குறித்த இதே வேளை,


தமிழகம் மற்றும் இலங்கை இடையே கப்பல் சேவை சுமார் 40 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு கடந்த 2023ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக தற்காலிகமாக இந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.



இந்நிலையில், மீண்டும் இந்த சேவை ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், இதற்கான முன்பதிவு டிசம்பர் 25 முதல் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், இந்த சேவை வாரத்திற்கு 6 நாட்கள் இருக்கும் எனவும், ஒரு சுற்றுக்கான போக்குவரத்து பயணச்சீட்டு செலவு 35,000 ரூபா வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top