முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தூணாக இருந்த ஜே.ஆர்.பி. சூரியப்பெரும தனது 96 ஆவது வயதில் நேற்று (02) காலமாகியுள்ளார்.
1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி பிறந்த ஜே.ஆர்.பி. சூரியப்பெரும கேகாலை மாவட்டத்தின் தெதிகம தொகுதியின் மக்களின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவாராவார்.
இவர், 2010 முதல் 2015 வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
ஜே.ஆர்.பி. சூரியப்பெரும அவர்களின் மறைவு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மட்டுமல்லாமல், தென்னிலங்கை அரசியலுக்கும் ஒரு பேரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.