அரசின் அலட்சியத்தாலேயே கண்டாவளையில் இரண்டு உயிர்கள் பலி - தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவிப்பு!

tubetamil
0

 கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் இறந்தமைக்கு அரச அதிகாரிகளின் அசம்பந்தப் போக்கே காரணம் எனவும், இப்பாலத்தின் புனரமைப்பு பணிகள் மீண்டும் மார்ச் மாதம் அளவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளார்.



நேற்றைய தினம்(02) கிளிநொச்சிக்கு  விஜயம் மேற்கொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , "A9 35 வீதியில் அமைந்துள்ள இந்த பாலம் நீண்ட காலமாக பழுதுபார்க்கப்படாமல் இருப்பதால், இரவு நேரங்களில் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். நேற்று, திருகோணமலை நிலாவெளியைச் சேர்ந்த 23 வயதான சாந்தன் மற்றும் 21 வயதான சிந்துக்கரன்  ஆகியோர் இந்த பாலத்தில் விழுந்து உயிரிழந்தனர்.


2020ஆம் ஆண்டிலேயே இந்த பாலத்தை புனரமைப்பதற்கான திட்டம் கொண்டு வரப்பட்டிருந்தாலும், கொரோனா பெருந்தொற்று மற்றும் ஒப்பந்தக்காரரின் பிரச்சினைகள் காரணமாக இந்தத் திட்டம் தாமதமாகி வந்தது. தற்போது புதிய ஒப்பந்தம் மார்ச் மாதத்தில் வழங்கப்படவுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஆனால், இந்த பாலத்தின் பழுதான நிலையை குறித்து மக்களுக்கு எச்சரிக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அரசாங்க அதிகாரிகளின் அலட்சியத்தால் இரண்டு உயிர்கள் பறிபோயிருப்பது மிகவும் வேதனை தருகிறது" என்று தெரிவித்துள்ளார்.


ரஜீவன் மேலும் கூறுகையில், "இந்த பாலம் கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் முக்கியமான பாலம். எனவே, இந்த பாலத்தை உடனடியாக புனரமைக்க வேண்டும். மேலும், இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுக்க, பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top