உடுவில் ஆலடி பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டுள்ளது.
இன்று (23) காலை மானிப்பாய் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், உடுவில் ஆலடி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீதே சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் செயல்பாட்டின் போது, கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், 33 லீற்றர் கசிப்பு, மற்றும் கோடா ஆகியவை கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த செயல்முறையில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது