ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், சமஷ்டி முறையின் அவசியத்தை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார்.
அவர் தனது X தளப் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வே ஈழத்தமிழர்களின் நீண்டகால அரசியல் உரிமைகளுக்கு வழிவகுக்கும் என்பதையம் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அந்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், "சமஷ்டி முறையை எதிர்நோக்கியே ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும். இது ஒரு இனத்தின் குரலாக உலகம் முழுவதும் பரவ வேண்டிய ஒன்றாகும்." என அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினருக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (18.01.2025) கொழும்பில் நடைபெற்றுள்ளது.
குறித்த விடயம் தொடர்பிலேயே அவர் மேற்கட்டுடவாறு தெரிவித்துள்ளார்.