2022ஆம் ஆண்டு ஓமானில் பணிபுரிந்த இலங்கை பெண் இராசலிங்கம் யசோமலர், கடந்த ஆண்டு முதல் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தார். அவரது குடும்பத்தினர் கடந்த 19 ஆம் திகதி ஊடகங்களின் வழியே அவரது மீட்புக்காக வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் அந்த பெண், கடந்த 11ஆம் திகதி திடீரென வீடு திரும்பி சேர்ந்தியுள்ளார்.
இது தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஓமானில் பணியாற்றும் போது, அப்பெண் சில கொடூரங்களை அனுபவித்துள்ளதாக கூறுகிறார். "நான் இரண்டு வருடங்கள் வேலை செய்தேன், இதில் ஒரு வருட சம்பளம் எங்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டது, ஆனால் மற்றொரு வருடத்திற்கு சம்பளம் அனுப்பப்படவில்லை. என்னை அடித்து, வெயிலில் மொட்டைமாடியில் கால்கள் முழு நீளமாக நிற்கச் செய்கிறார்கள். மேலும், கரண்டி சூடாக்கி என் காலில் வைத்தார்கள். நான் அங்கு கொடுமைகள் மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்தேன்" என அவர் கூறினார்.
அத்துடன் அந்த பெண், ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் "எனக்கு சம்பளத்தை பெற்றுத்தர வேண்டும்". எனவும் அவர் ஊடகங்களிடம் கோரியுள்ளார்