குற்றப்பட்டுலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறிய யோசித - முன்னிலையாகிய விமல்!

tubetamil
0

 குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து  யோசித ராஜபக்ச, தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ள  நிலையில்  நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தற்போது விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளார். 



இது குறித்தது மேலும் தெரிய வருவதாவது, கதிர்காமம் பகுதியில் உள்ள அரச காணியின் உரிமை தொடர்பான வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.


இரண்டு மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னரே அவர் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


குறித்த இதேவேளை , முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முன்னாள் பிரதம பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சியிடம் கடந்த வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றிருந்தனர்.



இதேவேளை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் இன்று  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.



முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நிதியமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் முறைப்பாடு செய்ய அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top