பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜனனி, லியோ படத்தில் நடித்ததைத் தொடர்ந்து தற்போது 'உசுரே' என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் முதல் பார்வைப் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
பிக் பாஸ் போட்டியாளர்களில் பலர் சினிமாவில் வாய்ப்பு பெற்று வருகின்றனர். அந்த வரிசையில், ஜனனியும் தற்போது ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த அவர், தற்போது 'உசுரே' என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படம் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட காதல் கதை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் ஜனனியின் புதிய பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.